குலசேகரம் பேரூராட்சியில் கருத்து கேட்புக் கூட்டம்

குலசேகரம் பேரூராட்சிப் பகுதியில் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  
Published on

குலசேகரம் பேரூராட்சிப் பகுதியில் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  
இப்பேரூராட்சிப் பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள்  பொதுச்சந்தையின் உள்பகுதியில் கொட்டப்படுவதால் அங்கு மலைபோல் குப்பைகள் தேங்குகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு நிலவுகிறது.
இதுதொடர்பான மாவட்ட ஆட்சியரிடம் புகார் சென்றதையடுத்து சந்தையில் குவிந்து கிடந்த குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டன. 
இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி  தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சிப் பகுதியில் தேங்கும் குப்பைகளை பத்மநாபபுரம் நகராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டு சென்று,  அதை தரம் பிரித்து,  இயற்கை உரம் தயாரிக்க மாவட்ட  ஆட்சியரிடம் அனுமதி வேண்டுதல்; அருகிலுள்ள பேரூராட்சிகளுடன் இணைந்து திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன. 
இதில், பொதுமக்கள்,  வணிகர் சங்க  நிர்வாகிகள்,  சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com