மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு ரூ. 4 கோடி மதிப்பில் தங்கத் தேர் ஒப்படைப்பு

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு ரூ. 4 கோடி மதிப்பிலான தங்கத்தேர் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:48 am

DIN

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு ரூ. 4 கோடி மதிப்பிலான தங்கத்தேர் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு ரூ.4 கோடி மதிப்பில் தங்கத் தேர் அமைக்கப்பட்டுள்ளது. 12.5 அடி உயரம் கொண்ட இந்த சிலைக்கு 9 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிம்ம வாகனம் தேரை இழுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்ட இத்தேரில், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அமைந்துள்ள முக்கிய அம்மன் கோயில்களில் உள்ள உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன. 
தங்கத்தேர் மண்டைக்காடு கோயிலில் ஒப்படைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக சனிக்கிழமை இரவு மயிலாடியிலிருந்து கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு தங்கத்தேர் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கன்னியாகுமரி பக்தர்கள் சங்கச் செயலர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து  மண்டைக்காட்டிற்கு தேர் கொண்டு செல்லப்பட்டது. 
அங்கு தேரை பகவதியம்மன் கோயிலுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தங்கத்தேரை கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் பகவதியம்மன் உற்சவமூர்த்தி தேரில் எழுந்தருளச் செய்து, தமிழகத்தில் உள்ள 32  முக்கிய கோயில்களிலிருந்து எடுத்து வரப்பட்ட வஸ்திரங்கள் மற்றும் பூஜைப் பொருள்களால் அலங்கரிக்கப்பட்டு, கோயிலைச் சுற்றி பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர். பின்னர் தேருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி,  வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சுவாமி சைதானந்த மகராஜ், பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், குமரி மாவட்ட பாஜக தலைவர் முத்துகிருஷ்ணன், கோயில் நிர்வாக கண்காணிப்பாளர் ஜீவானந்தம், குமரி மாவட்ட வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தென் மாவட்டங்களில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அடுத்ததாக மண்டைக்காட்டில் தான் தங்கத்தேர் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.