ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

நாகர்கோவிலில் குடும்ப பிரச்னையில் 2  குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை

நாகர்கோவிலில் குடும்ப பிரச்னை காரணமாக, 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :

நாகர்கோவிலில் குடும்ப பிரச்னை காரணமாக, 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம், கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (37), ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த சரண்யா(32) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது மகள் ரிப்கா(4), மகன் ஐசக் ஆபிரகாம் (2). இவர்கள் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி தெற்குத் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
தம்பதியர் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், ஏற்கெனவே இதுதொடர்பாக காவல் நிலையம் சென்ற இருவரையும் போலீஸார் சமரசம் செய்துவைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தம்பதி இடையே  மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுவிட்டு வெளியே சென்ற அருணாசலம், சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டில் சரண்யா சேலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளார். சிறிது தூரத்தில் குழந்தைகள் இருவரும் உயிரிழந்து கிடந்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருணாசலம் போலீஸாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த கோட்டார் போலீஸார், 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
கணவருடன் தகராறில் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சரண்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சரண்யாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் குறித்து,  வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.