சிரி... சிரி...
அந்த ஓட்டல் முதலாளிக்கு பாக்ஸிங் தெரியும்!
'அந்த ஓட்டல் முதலாளிக்கு பாக்ஸிங் தெரியும்!'
'அதான், 'இங்கு குத்து பரோட்டா கிடைக்கும்'னு போர்டுல போட்டிருக்கிறாரா?'
-தீபிகா சாரதி, சென்னை -5.
---------------------------------------------------------------------------------------
'என் உயரம் எனக்குத் தெரியும்!'
'இப்படி ஒரு பணிவா?'
'பணிவு இல்ல... இப்பத்தான் உயரம் பார்த்தேன்!'
- பர்வதவர்த்தினி, பம்மல்.
---------------------------------------------------------------------------------------
'தலைவர் வீட்டில் ரெய்டுக்கு வந்தவங்க ஏன் அலர்னாங்க?'
'பீரோவைத் திறந்ததும் நாகப் பாம்பு தலையைத் தூக்கி ஆடியதாம்!'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
---------------------------------------------------------------------------------------
'ஆபரேஷனுக்கு அந்த பேஷண்ட் ரொம்பப் பயப்படுறாரு, டாக்டர்?'
'என்னைப் பற்றி யார் கிட்டேயாவது விசாரிச்சிருப்பாரோ... !!'
-வி.ரேவதி, தஞ்சை.
---------------------------------------------------------------------------------------
'சர்வர், வெளியே மூன்றுவிதச் சட்னி பரிமாறப்
படும்னு போர்டு இருக்கே, என்னென்ன அது?'
'முந்தா நாள் செஞ்ச சட்னி, நேத்து செஞ்ச சட்னி, இன்னைக்கு செஞ்ச சட்னி, சார்!'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
---------------------------------------------------------------------------------------
'தரகரே... பொண்ணு வீட்டில் என்ன சொல்றாங்க?'
'பொண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சு இருக்காம். மாப்பிளையோட ஃபேஸ் புக், இன்ஸ்ட்ராகிராம் ஐ. டி. கேட்கிறாங்க...'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

