குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி குடியிருப்புக்குச் செல்லும் பாதைகளை வெள்ளம் அடித்துச் சென்றதால் பழங்குடி இளைஞர்கள் பாலம் அமைத்து அவற்றை சீரமைத்தனர்.
பேச்சிப்பாறை மோதிரமலையிலிருந்து 2 கி.மீ.தொலைவிலுள்ள கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்புக்குச் செல்லும் பாதைகள் மழை வெள்ளத்தால் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து தமிழ் நாடு மலை வாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலர் ரெகுகாணி தலைமையில் மரத்தடிகளை எடுத்து வந்து 2 தற்காலிக பாலங்களை அமைத்துக் கொடுத்தனர்.