கரும்பாட்டூரில் டிச.23இல் களியல் போட்டி
கன்னியாகுமரியை அடுத்த கரும்பாட்டூர் சிஎஸ்ஐ ஆலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு
கன்னியாகுமரியை அடுத்த கரும்பாட்டூர் சிஎஸ்ஐ ஆலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 23-ஆம் தேதி களியல் மற்றும் கோலாட்டப் போட்டிகள் நடைபெற உள்ளன.
கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கரும்பாட்டூர் சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் பாரம்பரிய விளையாட்டான களியல் மற்றும் கோலாட்டப் போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எச்.வசந்தகுமார், ஜே.ஜி.பிரின்ஸ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
23-ஆம் தேதி இரவு 7 மணிக்குத் தொடங்கும் போட்டிகள் அதிகாலை 2 மணி வரை நடைபெறும்.
சீனியர், ஜூனியர் பிரிவுகளில் நடைபெறும் களியல் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்படும். கோலாட்டப் போட்டியில் முதல்பரிசாக ரூ. 4,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்படும்.
போட்டிக்கான ஏற்பாடுகளை களியல் குழுச் செயலர் சி.டேனியல் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






