பொது சுகாதாரம் பேணுவதை சேவையாக கருதி செயல்பட வேண்டும் என்று சார் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனர் குறிப்பிட்டார்.
நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி ஆண்டு விழாவுக்கு தலைமை வகித்து சார் ஆட்சியர் பேசியது: சுகாதார ஆய்வாளர்கள் மக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவர்கள். மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் நீங்கள் (மாணவர்கள்) அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். சுகாதாரம் பேணுவதை சேவையாக கருத வேண்டும் என்றார் அவர்.
விழாவை, மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜான்.ஆர்.டி.சந்தோஷம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அவர் பேசியது: சமுதாய நலனில் பொது சுகாதாரத்தை பேணும் வகையில் பணி செய்யும் நீங்கள் அப்பணியை சேவையாக கருதி முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கல்லூரி தலைவர் அருள்கண்ணன், துணைத்தலைவர் அருள்ஜோதி, முதல்வர் லியாகத் அலி, நிர்வாக அலுவலர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக மாணவர்கள், இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் முதல்வர் அருணாச்சலம், ரோஜாவனம் அறக்கட்டளை நிறுவனர்கள் புலவர் ரத்தினசாமி, பார்வதி, ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி நடராஜன், மாவட்ட நன்னடத்தை அலுவலர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிலாளி கொலை: சகோதரா்கள் இருவா் கைது
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஒருவா் கைது

கொலம்பியா அதிபா் தோ்தல்: வலதுசாரி வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


