ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

Updated On :25 டிசம்பர் 2018, 7:10 am IST

நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர் கூட்டத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்க ஏராளமானோர் வருகின்றனர். இதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அச்சன்குளம் பகுதியைச் சேர்ந்த கோலம்மாள் (50) என்பவர் திங்கள்கிழமை தனது 10 வயது மகனுடன் வந்திருந்தார். கூலித் தொழிலாளியான இவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி மகனுடன் தீக்குளிக்க முயன்றாராம். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து கோலம்மாளிடம் நேசமணிநகர் போலீஸார் விசாரணை நடத்தினர். 
விசாரணையில், கோலம்மாளிடம் இருந்து அப்பகுதியைச் சேர்ந்த இயேசுதங்கம், தங்கசுஜிதா ஆகியோர் பணம் கடனாக வாங்கியிருந்தனராம். கடனை திருப்பிக் கேட்டதற்காக கோலம்மாளுக்கு மிரட்டல் விடுத்ததோடு, அவரது குடிசை வீட்டுக்கு 
தீ வைத்து சேதப்படுத்தினராம். இது தொடர்பாக கோலம்மாள் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.