குமரி மாவட்டம், ஈத்தாமொழியில் பெண்ணை தாக்கி 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரம் பெரியவிளை பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் கேரள மாநிலத்தில் கட்டட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (33). 2 குழந்தைகள் உள்ளனர்.
இதில் ஒரு குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ரேவதி சனிக்கிழமை தனது மொபெட்டில் 2 குழந்தைகளையும், தனது சகோதரியையும் அழைத்துக் கொண்டு நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர், அதே மொபெட்டில் ரேவதி ஈத்தாமொழியில் உள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
வடக்கு சூரங்குடி அருகே சென்றபோது, அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மொபெட்டை வழிமறித்து ரேவதியை தாக்கி, அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஈத்தாமொழி காவல் நிலைய ஆய்வாளர் முத்துராஜ், உதவி ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








