குமரி சரக்குப் பெட்டக முனையத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

கன்னியாகுமரி சரக்குப் பெட்டக மாற்று முனையத் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என முகிலன்குடியிருப்பில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்தனர்.
Updated on
1 min read

கன்னியாகுமரி சரக்குப் பெட்டக மாற்று முனையத் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என முகிலன்குடியிருப்பில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி பகுதியில் ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் துறைமுகம் அமைவதால் கோவளம்,  இலந்தையடிவிளை,  கோம்பவிளை, முகிலன்குடியிருப்பு, கோயில்விளை,  கீழமணக்குடி  உள்ளிட்ட கிராமங்களில்  விவசாய நிலங்கள் மற்றும் மீன்பிடித் தொழில் பாதிக்கும் என தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முகிலன்குடியிருப்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தலைமை வகித்தார். பச்சைத் தமிழகம் நிறுவனர் சுப.உதயகுமாரன்,  ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம்,  குமரி சமூக விடியல் இயக்கத் தலைவர் ஸ்ரீதரன், போராட்டக் குழுத் தலைவர் பிரபா, தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்புத் தலைவர் சர்ச்சில்,  குளச்சல் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஜேசையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டக் குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியது: துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதி விவசாயம், மீன்பிடித் தொழில் அதிகமாக உள்ளதாகும். இயற்கை வளத்தை அழித்து உருவாக்கப்படும் இதுபோன்ற திட்டங்களால் பொதுமக்களுக்கு எந்தபயனும் ஏற்படபோவதில்லை. மக்களை நேரடியாகப் பாதிக்கும் இத்திட்டத்தை அரசு கைடுவிடும் வரையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com