திருவனந்தபுரம் - காரைக்கால் வார ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வலியுறுத்தல்

திருவனந்தபுரத்திலிருந்து காரைக்காலுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருவனந்தபுரத்திலிருந்து காரைக்காலுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் அதன் செயலர் எட்வர்ட்ஜெனி தெற்கு ரயில்வேக்கு அனுப்பியுள்ள மனு: தெற்கு ரயில்வே திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் டவுண்,  திருநெல்வேலி,  மதுரை,  திருச்சி வழியாக காரைக்காலுக்கு வாராந்திர கோடைக்கால சிறப்பு ரயிலை (ரயில் எண் 06045, 06044)  அறிவித்துள்ளது. இந்த வழித்தடத்தில் நிரந்தர ரயில் இயக்கப்படவேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். 
எனவே, திருவனந்தபுரம் - காரைக்கால் சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும். மேலும் இந்த ரயில் குழித்துறை,  இரணியல், ஆரல்வாய்மொழி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com