பெருமாள்புரத்தில் குரூப்-4 இலவச மாதிரி தேர்வு

கொட்டாரத்தை அடுத்த பெருமாள்புரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கொட்டாரத்தை அடுத்த பெருமாள்புரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இம்மாதம் 11ஆம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பெருமாள்புரத்தில் இயங்கிவரும் அரோவ் பயிற்சி மையம் சார்பில் இலவச மாதிரி தேர்வு நடைபெற்றது. 
குமாரசுவாமி நலவாழ்வு மைய வளாகத்தில் நடைபெற்ற இந்த மாதிரி தேர்வை டாக்டர் ஞானசெளந்தரி தொடங்கிவைத்தார். பயிற்சி மைய இயக்குநர் பேராசிரியர் கருணாகரன்,  ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com