குமரி அறிவியல் பேரவையின் இளம்விஞ்ஞானி மாணவர் தேர்வுக்கான அணி உதவியாளருக்கு பயிற்சி முகாம் மார்த்தாண்டம் அருகேயுள்ள முள்ளஞ்சேரியில் நடைபெற்றது.
குமரி அறிவியல் பேரவை சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இளம் விஞ்ஞானிக்கான பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, அடுத்த ஆண்டுக்கான மாணவர்கள் தேர்வு செய்யவும், அணி உதவியாளராக செயல்படவும் கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற இளம் விஞ்ஞானி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கான பயிற்சி முகாமுக்கு குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் தலைமை வகித்து, அறிமுக உரையாற்றினார். சமூக விஞ்ஞானி எட்வின்சாம் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசினார். இம்முகாமில் மேடையில் பேசுதல், கருத்தரங்குகளில் பேசுதல், குழுக்களில் பேசுவதற்கான பயிற்சியை கவிஞர் கீழ்குளம் வில்லவன் வழங்கினார். தொடர்ந்து பேராசிரியை தன்யா, ஜாண்சன், லட்சுமி, ஓய்வுபெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சாம்ராஜ், சுனில்குமார், ஷைனி உள்ளிட்டோர் பயிற்சி வழங்கினர்.
தொடர்ந்து 2018- 2019ஆம் ஆண்டுக்கான புதிய தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் குழு ஆய்வு, கள ஆய்வுகள் நடைபெற்றது. அடுத்த பயிற்சி முகாம் ஜூன் 16 ,17ஆம் தேதிகளில் ஆலஞ்சோலை பகுதியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.