நாகர்கோவில் பள்ளிவிளை அரசு உணவு தானிய கிடங்கில் வியாழக்கிழமை பணியில் இருந்த தொழிலாளி உயிரிழந்தார். நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (59). இவர், பள்ளிவிளை அரசு உணவு தானிய கிடங்கில் சுமை ஏற்றும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
வியாழக்கிழமை வேலை செய்து கொண்டிருந்த போது அவர் மயங்கி விழுந்தாராம். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகத்தின் குடும்பத்தினர், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









