பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

கொலை முயற்சி வழக்கில் பிணையில் வந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கொலை முயற்சி வழக்கில் பிணையில் வெளிவந்த இளைஞர் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Updated On :8 ஜூன் 2018, 1:25 am IST

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கொலை முயற்சி வழக்கில் பிணையில் வெளிவந்த இளைஞர் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மணவாளக்குறிச்சி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ் (29) . கடந்த மே 24ஆம் தேதி சிவராஜ் உள்பட 6 பேர் சேர்ந்து, படர்நிலம் பகுதியைச் சேர்ந்த ரெக்சிலினை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட சிவராஜ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 
இதையடுத்து இரணியல் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்று மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில் சிவராஜ் புதன்கிழமை காலையில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த மணவாளக்குறிச்சி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.