ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

ஜூலை 2இல் ரயில் நிறுத்தப் போராட்டம்: அனைத்துக் கட்சி, அமைப்புகள் கூட்டத்தில் முடிவு

சமூகநீதியைத் தகர்க்கும்  உச்சநீதிமன்றத் தீர்ப்பை  திருத்தி எழுத வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகளும், தலித் இயக்கங்களும், ஜனநாயக

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

சமூகநீதியைத் தகர்க்கும்  உச்சநீதிமன்றத் தீர்ப்பை  திருத்தி எழுத வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகளும், தலித் இயக்கங்களும், ஜனநாயக இயக்கங்களும் இணைந்து  ஜூலை 2ஆம் தேதி நாகர்கோவில், கோட்டார்  ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளன.
இதுதொடர்பான கூட்டம்  தக்கலையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தீண்டாமை இயக்க  உதவிச் செயலர்  வேலப்பன் தலைமை வகித்தார்.  விடுதலைச் சிறுத்தை மேற்கு மாவட்டச் செயலர்  ஜெயன்,  நகரச் செயலர் ஜெயா, தீண்டாமை ஒழிப்பு ஒன்றியச் செயலர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிபிஎம்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்தாஸ்,  நிர்வாகிகள் ரதிநேசன், கணேசன், சுடலை, ரட்சணியசேனை சமுதாய நல அமைப்பு மாவட்டச் செயலர் இன்ப ஏசுராஜா, ரத்தினதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
பல ஆண்டுகளாக ஜனநாயக இயக்கங்கள் போராடி பெற்றதுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டம்.  ஆனால் தற்போது  இச்சட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தியபின்புதான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்கிறது.  
இதனால்  வன்கொடுமை மீதான புகார்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யமுடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பை திருத்தி எழுதிட கோரி பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் இணைந்து ஜூலை 2 இல் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.