கேரள பேருந்து மோதி நினைவு ஸ்தூபி சேதம்
களியக்காவிளை அருகே தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசு சின்னம் பொறித்த நினைவு தூண் மீது கேரள அரசுப் பேருந்து மோதியதில், தூண் முற்றிலும் சேதமடைந்தது.


களியக்காவிளை அருகே தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசு சின்னம் பொறித்த நினைவு தூண் மீது கேரள அரசுப் பேருந்து மோதியதில், தூண் முற்றிலும் சேதமடைந்தது.
தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளையில் தேசிய நெடுஞ்சாலையோரம் தமிழக அரசின் சின்னம் பொறித்த நினைவு தூணும், சாலையின் மறுபகுதியில் நான்கு சிங்கங்களின் உருவம் பொறிக்கப்பட்ட நினைவு தூணும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை மாலை திருவனந்தபுரத்திலிருந்து களியக்காவிளைக்கு கேரள அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, நெடுங்கோடு பகுதியிலிருந்து இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக முக்கிய சாலைக்கு வந்தார். இதைக் கவனித்த அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் லேசாக திருப்பினாராம். இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து அப்பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த கேரள அரசின் மின்கம்பம் மீது மோதியது. இதில் 2 மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததுடன், அருகில் உள்ள தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட நினைவு தூணும் உடைந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.
ஆகவே, பேருந்து மோதி சேதமடைந்த அரசு சின்னம் பொறிக்கப்பட்ட நினைவு தூணை அப்பகுதியில் விரைந்து அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...