திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நாகர்கோவிலில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில்  கைது

நாகர்கோவிலில் ஒரே நாளில் குண்டர் சட்டத்தின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:08 am

DIN

நாகர்கோவிலில் ஒரே நாளில் குண்டர் சட்டத்தின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீ நாத் பதவியேற்ற பிறகு பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.  மேலும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.  கடந்த சில நாள்களுக்கு முன்பு 6 பேர் குண்டர் சட்டத்தில்  கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்,  கோட்டாறு பறக்கை பகுதியைச் சேர்ந்த ராஜகணேஷ் (24),  கோட்டாறைச் சேர்ந்த சூர்யா ஆகியோர் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு  நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீ நாத் , மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார் அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே,  2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதே போல் ஆசாரிப்பள்ளம் கீழபெருவிளையைச் சேர்ந்த பிரகாஷ் ,  சுசீந்திரம் காவல் சரகத்துக்குள்பட்ட சீயோன்புரத்தைச் சேர்ந்த ஜான்ஆல்வின்பிரபு  உள்ளிட்ட 5 பேர் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.