குமரி மாவட்டம் கருங்கல் அருகே வீட்டின் கதவை உடைத்து திங்கள்கிழமை 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தொலையாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் போஸ்கோ (55). இவர் காதி வாரியத்தில் ஊழியராக உள்ளார். இவரது மனைவி சிஎஸ்ஐ டயோசில் சமூக நலப் பணியாளராக உள்ளார். இவர்களது மகன் மற்றும் மகள் படித்து வருகின்றனர்.
இவர் தான் பணிபுரியும் அலுவலகத்தில் வசூலாகும் பணத்தை வீட்டில் வைத்திருந்து, வாரம் ஒரு முறை வங்கியில் செலுத்துவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் திங்கள்கிழமை ஜான்போஸ்கோ மற்றும் அவரது மனைவி பணிக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டின் கதவை உடைத்த மர்மநபர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். மாலையில் வீடு திரும்பிய ஜான் போஸ்கோ, இதுகுறித்து கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது- ஜன நாயகன் படத்துக்கு குரல் கொடுத்த நடிகர் ரஜினி

பல நிலைகளில் மிக மோசமானது..! - ஜன நாயகன் விவகாரம் குறித்து ஆர்ஜே பாலாஜி!
தொடரும் தாக்குதல்... அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்லாத ஈரானிய குழு?!
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

