ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மீட்பு மையங்களுக்கு செல்ல வேண்டும்: ஆட்சியர் அறிவுரை

பேரிடர் ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த இடங்களுக்கு செல்லாமல் அரசு சார்பில் அமைக்கப்படும் பல்நோக்கு மையத்துக்குச் செல்ல வேண்டும் என்றார் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.  

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பேரிடர் ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த இடங்களுக்கு செல்லாமல் அரசு சார்பில் அமைக்கப்படும் பல்நோக்கு மையத்துக்குச் செல்ல வேண்டும் என்றார் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.  
கன்னியாகுமரி  மாவட்டம்,  கல்குளம் வட்டம்,  லெட்சுமிபுரம் கிராமம், கொட்டில்பாடு,  அகஸ்தீஸ்வரம் வட்டம்,  லீபுரம் கிராமம்,  ஆரோக்கியபுரம் ஆகிய கடற்கரை கிராமங்களில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.   பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் காலங்களில் துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை ஒத்திகையாக செய்தனர்.
ஒத்திகை நிகழ்ச்சியில்,  ஆட்சியர் கலந்துகொண்டார்.  
மேலும்  கடலோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பேரிடர்  பல்நோக்கு பாதுகாப்பு மையம் மற்றும் மருத்துவ முகாமையும்,  தற்காலிமாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையத்தையும் பார்வையிட்ட அவர் மேலும் கூறியது,  பொதுமக்கள் சுனாமி ஏற்படுவது குறித்த மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்படும்போது, தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தங்களது அத்தியாவசியப் பொருள்களை எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக, சான்றிதழ்கள், அடையா அட்டைகள் ஆகியவற்றை தவறாமல் எடுத்து செல்ல வேண்டும்.   பேரிடர் ஏற்படும் காலங்களில் அரசு அலுவலர்களின் அறிவுரைகளை  பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.  பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த இடங்களுக்கு செல்லாமல் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை பல்நோக்கு மையத்துக்கு வர வேண்டும் என்றார் அவர். 
இந்நிகழ்ச்சியில்,  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ராஹூல்நாத்,  பத்மநாபபுரம்  சார்- ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.