மத்திய அரசு நிதி ஒதுக்கியும் சாலைப் பணியில் மெத்தனம்: களியல் பகுதி மக்கள் அதிருப்தி
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், குமரி மாவட்டத்தில் சாலைப் பணியை நிறைவேற்றுவதில் மெத்தனப் போக்கு நிலவுவதாக மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், குமரி மாவட்டத்தில் சாலைப் பணியை நிறைவேற்றுவதில் மெத்தனப் போக்கு நிலவுவதாக மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளன. குறிப்பாக குழித்துறையிலிருந்து அருமனை, ஆலஞ்சோலை வழியாக ஆறுகாணி செல்லும் சாலை பெருமளவில் சேதமடைந்த நிலையில் இருந்தது. இச்சாலையில் உத்தரங்கோடு, முழுக்கோடு உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை இயக்குவதற்கு பெரும் சிரமம் இருந்து வந்தது.
இதை அறிந்த, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முயற்சியால், மத்திய சாலை நிதி தொகுப்பிலிருந்து ரூ. 85 லட்சத்தில் இச்சாலையை சீரமைக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், சாலைப் பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. இதனிடையே, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பெய்த மழையில் இச்சாலை மேலும் பழுதடைந்தது. இந்நிலையில், மார்த்தாண்டம் மேம்பாலம் பணிக்கான மாற்று வழித்தடமாக இச்சாலை பயன்படுத்தப்பட்டு வாகனப் போக்குவரத்து மிகுந்துள்ளதால் சாலை மேலும் உருக்குலைந்து வருகிறது.
குறிப்பாக, களியல் முதல் படப்பச்சை வரை விரிவாக்கப் பணிகள் நிறைவுறாமல் பாதியிலேயே முடங்கியுள்ளதால் அச்சாலை வழியாக பயணம் செய்யும் மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்துள்ளனர். எனவே, சாலைப் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் முன் வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






