குளச்சல் அருகே படகு நிறுத்துவதில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (30). ஆழ்கடலில் மீன் பிடித்து விட்டு வழக்கம் போல் குளச்சல் துறைமுகத்தில் விசைப்படகை நிறுத்தச் சென்றாராம். அப்போது அவருக்கும், மரமடியைச் சேர்ந்த விமல்ராஜ் (35) என்பவருக்கும் இடையே படகு நிறுத்துவதில் பிரச்னை ஏற்பட்டதாம். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக மாறியது.
இந்த மோதலில் சேவியர், ஜெயசீலன் மற்றும் சேவியர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக, இரு தரப்பினரும் குளச்சல் போலீஸில் அளித்த புகாரின் பேரில் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் விமல்ராஜ், போர்ஜியோ ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டைத் தங்கம் வென்ற இனியன் பன்னீர்செல்வம்!

மத்திய அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்: கார்கே

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

அண்ணன் இளையராஜாவைப் பற்றி தவறாக பேசாதீர்கள்: கங்கை அமரன்
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!


