மார்த்தாண்டம் மேம்பாலத்தை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் குழுவினர் புதன்கிழமை திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வெட்டுவெந்நியில் குழித்துறை ஆற்றுப் பாலம் முதல் மார்த்தாண்டம் அருகேயுள்ள பம்மம் வரை 2.5 கி.மீ. தொலைவுக்கு ரூ. 220 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம் தமிழகத்தின் முதல் இரும்பு பாலமாகவும், தென்னிந்தியாவின் மிக நீளமான இரும்பு பாலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேம்பாலத்தின் மேல் பகுதி பணிகள் நிறைவடைந்து கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி முதல் பரீட்சார்த்த முறையில் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பாலத்தின் கீழ் பகுதி சாலைகள் சீரமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், மார்த்தாண்டம் சந்திப்பு அருகிலுள்ள கோதேஸ்வரம் கோயில் செல்லும் சாலை அருகே மேம்பாலத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு, சாலையின் கீழ்பகுதிக்குச் செல்ல சுழல் படிக்கட்டுகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கம் செல்லும் அரசுப் பேருந்துகள் இங்கு நின்று செல்லும் வகையில் பேருந்து நிறுத்தமும் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை முதன்மை பொறியாளர் பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் மேம்பாலம் தொடங்கும் வெட்டுவெந்நி பகுதியிலும், அதையொட்டி அதிக உயரமான தூண்கள் அமைந்துள்ள பகுதியிலும் மற்றும் மார்த்தாண்டம் சந்திப்பு, பம்மம் உள்ளிட்ட பகுதிகளிலும் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.எனினும், ஆய்வு நடத்தியதற்கான காரணம் குறித்த எந்த தகவலையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து பார்வதிபுரம் பாலத்தைப் பார்வையிட சென்றுவிட்டனர்.
இதனிடையே, ஜன. 27 ஆம் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனைக்கு அடிக்கல் நாட்டும்போது, மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்களை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முத்தூட் ஃபின்காா்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு

உற்பத்தி அதிகரித்தாலும் ஆண்டுதோறும் 3,500 பணியாளா்கள் வரை குறைய வாய்ப்பு - செயில்

ஏஜிஆா் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு

துவாரகாவில் அறைத் தோழியின் ஆண் நண்பா்கள் மிரட்டியதாக பெண் புகாா்: காவல் துறை வழக்குப் பதிவு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
