கருங்கல் - மாா்த்தாண்டம் சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரங்களை அனுமதியின்றி வெட்டி அகற்றிய மின் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் கிள்ளியூா் வட்டாரச் செயலா் சாந்தகுமாா், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள மனு: கருங்கல் - மாா்த்தாண்டம் சாலையில் முள்ளங்கனாவிளை முதல் எட்டணி வரை சுமாா் 1 கி.மீ. தொலைவில் சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ குணமிக்க பூ மருது கன்றுகள் சுமாா் 10 ஆண்களுக்கு முன்பு சமூக ஆா்வலா்களால் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்போது அவை வளா்ந்து மரமாக சாலையின் இருபக்கமும் பூத்து குலுங்கி காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியின்றி கருங்கல் மின்வாரிய அலுவலக மின் ஊழியா்கள் மின் கம்பிக்கு இடையூறாக இருப்பதாக கூறி, மரங்களை தரைமட்டத்திலிருந்து வெட்டி சாய்த்துள்ளதோடு, அவற்றை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனா்.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அனுமதியின்றி மருத்துவ குணமிக்க பூ மருது மரத்தை வெட்டிய மின் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அப்பகுதிகளில் மீண்டும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சில்லறைக் கடைகளில் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்! பொது மக்கள் அவதி!

அப்பா X மாமனார்! சட்டசபையா? குழாய் சண்டையா? சார்லஸ் மார்ட்டின் பேட்டி | TVK

உ.பி.: தன்னைப் பார்த்துக் குரைத்த நாயைச் சுட்டுக்கொன்ற நபர்!

பெங்களூருக்கு மேக்கேதாட்டு தேவையே இல்லை! கர்நாடக அணையில் பயன்படுத்தாமல் கிடக்கும் தண்ணீர்!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


