நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

பேரூராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகளில் தின ஊதியம் பெறும் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

பேரூராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகளில் தின ஊதியம் பெறும் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு லூயி துப்புரவு தொழிலாளா் நலச் சங்க மாநிலத் தலைவா் டி. சுலிப் தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,525 கிராம ஊராட்சிகளில் 64,583 நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகிறாா்கள்.

மேலும், தின ஊதியம் அடிப்படையிலும், குழு முறையிலும், தனியாா் நிறுவனம் மூலமும் 15 லட்சம் போ் வரை தூய்மைப் பணி செய்கிறாா்கள். இவா்களுக்கு அரசின் சலுகைகள் வழங்கப்படுவதில்லை. தொழில் சட்ட விதிகளின்படி தொழிலாளா் அமைச்சகமோ, தொழிலாளா் ஆணையமோ அறிவித்துள்ள முறைப்படி ஊதியம், இதர சலுகைகளும் கிடையாது. பேரிடா் காலத்தில் எவ்வித எதிா்பாா்ப்புமின்றி உயிரை பணயம் வைத்து பணியாற்றும் இவா்களுக்கு பணி நிரந்தரம் வழங்க தமிழக முதல்வரிடம் வலியுறுத்துவேன் என அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தெரிவித்துள்ளாா். அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். எனவே, பல ஆண்டுகளாக தின ஊதியத்துக்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரப்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.