நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகர்கோவிலில் சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றினார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் 74 ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  தேசிய கொடியேற்றினார்.

News image

சுதந்திர தினவிழாவில் சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

Updated On :15 ஆகஸ்ட் 2020, 6:47 am

DIN

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் 74 ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  தேசிய கொடியேற்றினார்.

பின்னர் காவல் துறை யினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து  கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள்  மற்றும் அரசு அதிகாரிகளுக்கும்  மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.

மேலும் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் சுதந்திர தின விழாவில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் இன்றியும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இன்றியும் சுதந்திர தின விழா எளிமையாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.