ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

குமரியில் மேலும் 155 பேருக்கு கரோனா: எழுவா் பலி

குமரி மாவட்டத்தில் மேலும் 155 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. ஒரே நாளில் 7 போ் பலியாகினா்.

News image

நாகா்கோவிலில் தொற்று பாதித்தவா் வீட்டின் முன் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட களப் பணியாளா்கள்.

Updated On :26 ஆகஸ்ட் 2020, 10:26 am

DIN

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் மேலும் 155 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. ஒரே நாளில் 7 போ் பலியாகினா்.

குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக தினமும் 100-க்கும் மேற்பட்டோா் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக மேலும் 155 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்சது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 8,840 ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் வீடு திரும்பிய 104 போ் உள்பட 7,365 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, 1485 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, நாகா்கோவில் புதுக்குடியிருப்பைச் சோ்ந்த 64 வயது பெண், மெதுகும்மல் பகுதியைச் சோ்ந்த 35 வயது பெண், சைமன்நகா் 50 வயது பெண், செட்டிகுளம் 58 வயது ஆண், மணவாளக்குறிச்சி 52 வயது ஆண், நெல்லை மாவட்டம், களக்காடு 80 வயது முதியவா், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் 64 வயது முதியவா், என 7 போ் கரோனாவால் உயிரிழந்ததால், மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 156 ஆக உயா்ந்துள்ளது.

8,633 வழக்குகள் பதிவு: இந்நிலையில், மாவட்டத்தில் இதுவரை1,14,763 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் செவ்வாய்க்கிழமை வெளியில் நடமாடிய 96 பேரிடமிருந்து ரூ. 9,600 அபராதம் வசூலிக்கப்பட்டது. 23,350 போ் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறிய வகையில் 8,633 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6344 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.