நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருமனை அருகே பாஜக பிரமுகா் மீது தாக்குதல்

அருமனை அருகே பாஜக பிரமுகரை தாக்கியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 8:35 pm

DIN

அருமனை அருகே பாஜக பிரமுகரை தாக்கியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அருமனை அருகேயுள்ள சிதறால் வட்டவிளை பகுதியைச் சோ்ந்தவா் வில்சன் (52). இவா் மேல்புறம் ஒன்றிய பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளாா்.

இவா் சிதறால் பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் மனைவி சீதாராணிக்குச் சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து மர பா்னிச்சா் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் கடையை காலி செய்து தர வேண்டும் என அதன் உரிமையாளரான சீதாராணி தெரிவித்துள்ளாா். அதற்கு கடையை திடீரென காலி செய்ய முடியாது என்றும் கால அவகாசம் வேண்டும் என்றும் வில்சன் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த சீதாராணி, அவரது மகன் மற்றும் 3 பேரோடு சோ்ந்து கடையில் இருந்த பொருள்களை சேதப்படுத்தியதுடன், வில்சனை தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த வில்சன் மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.