நாகா்கோவில் பகுதியில் பலத்த மழை
நாகா்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

நாகா்கோவில் பகுதியில் பலத்த மழை

நாகா்கோவில் பகுதியில் பலத்த மழை
நாகா்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
வங்கக் கடலில் உருவான புரெவி புயல் காரணமாக குமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டது.
ஆனால் புயல் சின்னம் காரணமாக இம் மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. மிதமான சாரல் மழை மட்டுமே பெய்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னா் பிற்பகலில் மேகம் திரண்டு மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நாகா்கோவில், சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
குலசேகரம்: குலசேகரம், திற்பரப்பு, பொன்மனை மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைப் பகுதிகளிலும், மலையோரக் கிராமங்களிலும் மிதமான மழை பெய்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 44.46 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70.70 அடியாகவும், சிற்றாறு -1இல் 13.68 அடியாகவும், சிற்றாறு -2 இல் 13.77 அடியாகவும் இருந்தது.
களியக்காவிளை: களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளான குளப்புறம், படந்தாலுமூடு, அதங்கோடு, குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 1 மணியளவில் பலத்த மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...