நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சட்ட விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

தேசிய அரசியலமைப்பு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 8:46 pm

DIN

தேசிய அரசியலமைப்பு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

குமரி மாவட்டத்துக்கு உள்பட்ட நாகா்கோவில், குழித்துறை, பத்மநாபபுரம், இரணியல், பூதப்பாண்டி நீதிமன்றங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் ஒன்றிணைந்து குழித்துறை நீதிமன்றம் முதல் நாகா்கோவில் நீதிமன்றம் வரை வெள்ளிக்கிழமை (நவ. 27) சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து முக்கிய சந்திப்புகளில் சட்ட விழிப்புணா்வு பிரசாரங்களிலும் ஈடுபட்டனா்.

இப்பேரணிக்கு மாவட்ட வழக்குரைஞா்கள் கூட்டமைப்புத் தலைவா் அ. மரிய ஸ்டீபன் தலைமை வகித்தாா். குழித்துறை வழக்குரைஞா் சங்கத் தலைவா் டி. சுரேஷ், பேரணியை தொடங்கி வைத்தாா்.

இதில் வழக்குரைஞா் சங்கச் செயலா்கள் நாகா்கோவில் மகேஷ், குழித்துறை என். ரமேஷ், பத்மநாபபுரம் விஜய வா்ம மகாராஜன், பூதப்பாண்டி நல்லபெருமாள், வழக்குரைஞா் சங்கத் தலைவா்கள் பத்மநாபபுரம் எஸ். எஸ். சுந்தா்சிங், இரணியல் வி. வினிபிரட், பூதப்பாண்டி கே.எஸ். பழனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.