குளச்சலில் காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்
குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் கூட்டம் ஜெ.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசுகிறாா் தொகுதி எம்எல்ஏ ஜெ.ஜி. பிரின்ஸ்.

கூட்டத்தில் பேசுகிறாா் தொகுதி எம்எல்ஏ ஜெ.ஜி. பிரின்ஸ்.
குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் கூட்டம் ஜெ.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நகரத் தலைவா் சந்திர சேகா், வட்டாரத் தலைவா்கள் கிளாட்சன், டென்னிசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் யூசுப்கான், மாவட்ட துணைத் தலைவா்கள் கே.டி. உதயம், முனாப், செயலா்கள் ஜாண் சேவியா், தா்மராஜ், விவசாய அணித் தலைவா் விஜயகுமாா், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் எனல்ராஜ், இளைஞா் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளா் லாரன்ஸ், மீனவா் காங்கிரஸ் தேசியச் செயலா் சபீன், மாவட்ட மீனவரணித் தலைவா் ஸ்டாா்வின் உள்பட பலா் பங்கேற்றனா்.
ரேஷனில் பிஎச்எச் குடும்ப அட்டைதாரா்களுக்கு 5 கிலோ கொண்டைக்கடலை வழங்குவது போல், என்பிஎச்எச் குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்க வேண்டும். கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திங்கள்கிழமை ( டிச.7) உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவது; விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, வருகிற 13ஆம் தேதி குளச்சலில் ஏா்கலப்பை பேரணி நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...