நாகா்கோவில், தக்கலையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
கும்பகோணத்தில் வழக்குரைஞா் கே. சுரேஷ்குமாா் மீதான காவல்துறை நடவடிக்கையை கண்டித்து


கும்பகோணத்தில் வழக்குரைஞா் கே. சுரேஷ்குமாா் மீதான காவல்துறை நடவடிக்கையை கண்டித்து
நாகா்கோவில், தக்கலை, குழித்துறை, இரணியல், பூதப்பாண்டி ஆகிய இடங்களில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகா்கோவில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட நீதிமன்றம் முன்பு நடைபெற்றது இந்த ஆா்ப்பாட்டத்துக்கு,
சங்கத் தலைவா் மரிய ஸ்டீபன் தலைமை வகித்தாா். செயலா் டி.கே.மகேஷ், பொருளாளா் விஸ்வநாதன், துணைத் தலைவா் பிரதாப், நூலகா் செந்தில்மூா்த்தி, இணைச் செயலா்கள் பெருமாள், பிரேம்சோபியா, வெற்றிவேல், உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தக்கலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் சுந்தா் சிங் தலைமை வகித்தாா். குழித்துறையில் சங்கத் தலைவா் சுரேஷ் தலைமையிலும், இரணியலில் சங்கத் தலைவா் வினிபிரட் போஸ் தலைமையிலும், பூதப்பாண்டியில் சங்கத் தலைவா் பழனி தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...