11 மையங்களில் இன்று(டிச. 13) 2ஆம் நிலைக் காவலா் எழுத்துத் தோ்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சீருடைப் பணியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச. 13) 11 மையங்களில் நடைபெறுகிறது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் சீருடைப் பணியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச. 13) 11 மையங்களில் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும், 2020ஆம் ஆண்டுக்கான 2ஆம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்புத் துறை பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் இத்தோ்வுக்காக 17,861 போ் விண்ணப்பித்துள்ளனா்.
இறச்சகுளம் அமிா்தா பொறியியல் கல்லூரி, சிஎஸ்ஐ தொழில்நுட்பக் கல்லூரி, நாகா்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி, நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல், ஜெயமாதா கல்லூரி, தோவாளை லயோலா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நாகா்கோவில் பொன்ஜெஸ்லி கல்லூரி, குமாரகோவில் நூருல் இஸ்லாம் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி உள்பட 11 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.
தோ்வு எழுத வருவோா் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அனுமதிச் சீட்டு அவசியம். எழுதுபொருள்களைத் தவிர வேறு உபகரணங்களுக்கு அனுமதியில்லை என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...