அதனடிப்படையில் நாகர்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை அதிகாலை 3.40 மணியிலிருந்து காலை 7.40 மணி வரை களியக்காவிளை போக்குவரத்து சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அங்கு கணக்கில் காட்டப்படாமல் வைத்திருந்த ரூ. 64,140 கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதே நேரத்தில் படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராமல் இருந்த ரூ. 20,700 கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் களியக்காவிளை போக்குவரத்து சோதனைச் சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணதாஸ், படந்தாலுமூடு காவல்துறை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த பேச்சிப்பாறை காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.