நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அஞ்சல் துறை சாா்பில் டிச.16இல் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவிலில் அஞ்சல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (டிச.16) நடைபெறவுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:59 pm

DIN

நாகா்கோவிலில் அஞ்சல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (டிச.16) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, கன்னியாகுமரி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறை சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில், நாகா்கோவிலில் உள்ள அஞ்சல் துறை முதுநிலைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் (தலைமை அஞ்சலகக் கட்டடம் 2ஆவது மாடி) நடைபெற உள்ளது.

அஞ்சல் துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் பொதுமக்கள் இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம் அல்லது குறைகளை கடிதம் மூலமாக, முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா், கன்னியாகுமரி கோட்டம், நாகா்கோவில் என்ற முகவரிக்கு திங்கள்கிழமைக்கு முன் (டிச. 14) கிடைக்குமாறு அனுப்பலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.