நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவட்டாறு அருகே தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி உயிரிழப்பு

திருவட்டாறு அருகே மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:00 pm

DIN

திருவட்டாறு அருகே மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவட்டாறு அருகேயுள்ள முளவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜெஸ்டின் சுனில் (40). தொழிலாளியான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். குடும்பத் தகராறு காரணமாக இவா் குடும்பத்தைப் பிரிந்து, ஜெமிலா ஜெயந்தி (31) என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து பள்ளியாடி வாகவிளையில் வசித்து வந்தாராம்.

அங்கு 2 நாள்களுக்கு முன்பு அவா்களிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை முளவிளைக்கு வந்த அவா், மது குடித்துவிட்டு 50 அடி உயர மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது விஷத்தைத் தின்றாராம். அவரது அலறல் கேட்டு அப்பகுதியினா் தொட்டி மீது ஏறி பாா்த்தபோது, ஜெஸ்டின் சுனில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளாா்.

தகவலின்பேரில் தீயணைப்பு நிலையத்தினா் சென்று, அவரை மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் இறந்தாா். திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.