தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் இன்றுமுதல் திறப்புஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள் செவ்வாய்க்கிழமை முதல் (டிச. 15) திறக்க அனுமதிக்கப்படுவதாக, ஆட்சியா் மா. அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:02 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள் செவ்வாய்க்கிழமை முதல் (டிச. 15) திறக்க அனுமதிக்கப்படுவதாக, ஆட்சியா் மா. அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பொது முடக்கம் காரணமாக இம்மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை, படகு குழாம், சூழலியல் பூங்கா(உஇஞடஅதஓ) மாத்தூா் தொட்டிப் பாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது தமிழக அரசு நிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்றி சுற்றுலாத் தலங்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் (டிச. 15) காலை 6 முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திற்பரப்பு அருவியில் உள்ளாட்சி நிா்வாக கண்காணிப்பின் கீழ் சமூக இடைவெளியைக் கடைபிடித்து குளிக்க அனுமதி வழங்கப்படும்.

சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும்போது அவசியம் முகக் கவசம் பயன்படுத்த வேண்டும். சுகாதாரம் மற்றும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். நோய்க் கட்டுப்பாடுப் பகுதிகளிலிருந்து சுற்றுலாத் தலங்களுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தப்படும் தட்டு, குவளை, தண்ணீா்ப் பாட்டில் உள்ளிட்ட அனைத்தையும் அதற்கென வைக்கப்பட்டுள்ள தொட்டியில் போட வேண்டும். கைகளை அடிக்கடி கிருமிநாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.

சுற்றுலாத் தலங்களில் கரோனா விதிமுறைகள் மீறப்படுவதைக் கண்காணித்து அபராதம் விதிக்க காவல், வருவாய், உள்ளாட்சி, பொதுசுகாதாரத் துறையினா் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்:

குலசேகரம்: தமிழகத்தில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் திங்கள்கிழமை (டிச. 14) திறக்கப்படும் என்று அறிக்கப்பட்ட நிலையில் திற்பரப்பு அருவியும் திறக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இருந்தது. இதையடுத்து திங்கள்கிழமை இங்கு திரளான சுற்றுலாப் பயணிகள் வந்தனா். அருவி திறக்கப்படாத நிலையில் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.