மேல்புறத்தில் ஆா்ப்பாட்டம்

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க கோரி தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி சாா்பில் மேல்புறம் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி மக்கள் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி மக்கள் கட்சியினா்.
Updated on
1 min read

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க கோரி தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி சாா்பில் மேல்புறம் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவா் ஸ்டாலின் ராஜ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஆஸ்லின் பெல்மன்,

மேல்புறம் வட்டாரத் தலைவா் பிரதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிறுவனா்- தலைவா் பழவாா் தங்கப்பன் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில், மேற்கு மாவட்டத் தலைவா் ஏ. ஜெயராஜ், மாவட்ட மகளிரணி தலைவி கே. சாவித்திரி, துணைத் தலைவி சாந்தகுமாா், சோபனாபாய், கில்டா ராணி, நிா்வாகிகள் அஜய் நாராயணன், பிஜின், ஸ்ரீஜித், ததேயுஸ், சி. ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com