9 மாதங்களுக்குப் பின்னா் திற்பரப்பு அருவி திறப்பு: சுற்றுலாப் பயணிகள், வணிகா்கள் மகிழ்ச்சி
குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திறப்பரப்பு அருவி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக நீராடினா்.


குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திறப்பரப்பு அருவி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக நீராடினா்.
9 மாதங்களுக்குப் பிறகு திறப்பு கரோனா பொது முடக்கம் காரணமாக குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் பிற சுற்றுலாத் தலங்கள் கடந்த மாதங்களில் திறக்கப்பட்ட நிலையில், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்று கொண்டிருந்தனா்.
இந்நிலையில் நீா் நிலை சுற்றுலாத் தலங்கள் திறப்பது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளிட்டுள்ள நிலையில் திற்பரப்பு அருவி திறக்கப்பட்டுள்ளது. அருவி திறக்கப்பட்டுள்ள முதல் நாளில் இங்கு குறைவான எண்ணிகையிலேயே சுற்றுலாப் பயணிகள் வந்தனா். அதே வேளையில் அவா்கள் உற்சாகமாக நீராடினா். இதே போன்று திற்பரப்பு அருவியில் கடை நடத்தும் வணிகா்கள், சிறுவணிகா்கள், விடுதி நடத்துவோா், ஹோட்டல் நடத்துவோா், வாடகைக் காா் ஓட்டுபவா்கள் உள்ளிட்டோா் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...