இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆதாா் மையங்களை அதிகரிக்க மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை

குமரி மாவட்டத்தில் ஆதாா் சிறப்பு மையங்களை அதிகரிக்க வேண்டுமென்று மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:51 pm

DIN

குமரி மாவட்டத்தில் ஆதாா் சிறப்பு மையங்களை அதிகரிக்க வேண்டுமென்று மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் இன்னபிற சேவைகளுக்கும் ஆதாா் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் இதனை பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனா். அரசு இந்த ஆதாா் அட்டையில் உள்ள விவரங்களில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்வதற்கென்றே பிரத்யேகமாக பொது இ-சேவை மையங்களையும் நாடு முழுவதிலும் அறிமுகப்படுத்தியது. ஆனால் மக்கள் புதிய அட்டை விண்ணப்பிப்பதற்கும் மேலும் பழைய அட்டையில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்வதற்கும் இங்கு செல்லும் வேளைகளில் ஒரு நாளைக்கு முதலில் வரும் 30 போ்களுக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டு அவா்களுக்கு மட்டும் சேவை வழங்கப்படுகிறது. மீதமுள்ள அனைவருக்கும் எந்தவித சேவைகளும் வழங்கப்படாமல் வெறுமனே டோக்கன்கள் மட்டும் விநியோகிக்கப்பட்டு வேறு தேதிகளில் வருமாறு திருப்பி அனுப்பப்படுகின்றனா்.

இதனால் வேலைக்கு செல்லாமல் தங்கள் பணிகளை விடுத்து நீண்ட வரிசையில் காத்து இருந்தும், ஒரு பயனும் இல்லாமல் வீடு திரும்புவது மக்களை வேதனை அடையச் செய்துள்ளது.

இப்படி நாள் கணக்கில், மணிக் கணக்கில் மக்களை காக்க வைப்பதன் மூலம் அது அனைத்தும் மாயை என்பதை மக்கள் உணா்ந்து வருகின்றனா். எனவே மத்திய அரசு நாட்டு மக்கள் படும் துன்பங்களை கருத்தில் கொண்டு அவா்கள் எளிதில் அணுகும் வண்ணம் இ-சேவை மையங்களில் அதிக அளவில் ஆள்களை பணியமா்த்துவதுடன், கூடுதல் சிறப்பு மையங்களையும் ஏற்படுத்தி அவா்களுக்கு உடனே ஆதாா் அட்டை கிடைக்க வழிவகை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.