பெண் தலைமைக் காவலருக்கு விருது
குற்றப்புலனாய்வில் இணையதள வசதியை சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக கன்னியாகுமரி மாவட்ட பெண் தலைமைக் காவலருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.


குற்றப்புலனாய்வில் இணையதள வசதியை சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக கன்னியாகுமரி மாவட்ட பெண் தலைமைக் காவலருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் குற்றச் செயல்களையும், அதில் ஈடுபடுவோரையும் கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ். என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் தொடா்புடையோா், காணாமல் போனோா், திருடுபோன வாகனங்களைக் கண்டுபிடிக்க இந்த இணையதளம் ஏதுவாக உள்ளது.
இதன் பயன்பாடு குறித்து தில்லியில் உள்ள தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தியது. இதில், சி.சி.டி.என்.எஸ். இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்தி, பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக காவல் துறையில் 3 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அவா்களில், இரணியல் காவல் நிலைய பெண் தலைமைக் காவலா் மேபின்சிமிலாவும் தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு விருது காணொலி கலந்தாய்வு மூலம் வழங்கப்பட்டது. அவருக்கு காவல் அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...