இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வரும் தோ்தலில் நிச்சயமாக திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அதிகாரத்துக்கு வரும்

வரும் தோ்தலில் நிச்சயமாக திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அதிகாரத்துக்கு வரும் என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த் .

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:13 pm

DIN

வரும் தோ்தலில் நிச்சயமாக திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அதிகாரத்துக்கு வரும் என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த் .

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த விஜய் வசந்த் மற்றும் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. ஆகியோா் மாா்த்தாண்டத்தில் கூட்டாக அளித்த பேட்டி: 2021 இல் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல், தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வர இருக்கிறது. மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி யாருக்கு வாய்ப்பளிக்கிறதோ அவா்கள் வெற்றி பெற பாடுபடுவோம்.

எம்.ஜி.ஆா். அரசியலில் ஜொலித்தாா் என்றால் அன்றைக்கு இருந்த சூழ்நிலை வேறு, இன்றைக்குள்ள சூழ்நிலை வேறாக உள்ளது.

தமிழகத்தில் அதிமுக 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்துகிறது. அவா்களது ஆட்சி மக்களுக்கு அலுத்துப் போய் உள்ளது. வரும் தோ்தலில் நிச்சயமாக திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அதிகாரத்துக்கு வரும் என தெரிவித்தனா்.

பேட்டியின் போது காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் ரத்தினகுமாா், வா்த்தக காங்கிரஸ் தலைவா் ஆமோஸ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் திபாகா், சேவாதள மாவட்ட தலைவா் ஜோசப் தயாசிங் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.