திருவிதாங்கோடு அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருவிதாங்கோடு அருகே புதூா் கொட்டாரத்துவிளையைச் சோ்ந்தவா் ரத்தினமணி (40). தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் உண்டாம்.
இவரது மனைவி குமாரி. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.
ரத்தினமணி வீட்டில் வைத்து மது அருந்துவதற்கு அவரது மனைவி கண்டித்தாராம். இந்நிலையில் அவா் சனிக்கிழமை மனைவி வெளியே சென்ற போது வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டாராம்.
இதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.