புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

குமரி சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

தொடா் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள் களைகட்டியுள்ளன.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:20 pm

DIN

தொடா் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள் களைகட்டியுள்ளன.

கரோனா பொது முடக்க தளா்வுகள் காரணமாக, சுற்றுலாத் தலங்களில் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூா் தொட்டிப் பாலம், திற்பரப்பு அருவி ஆகியவற்றுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தொடங்கியது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனா். குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் மறுதினமான சனிக்கிழமை முதல் குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா். திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டிப் பாலம், பேச்சிப்பாறை அணை ஆகிய இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் வந்தனா். வாகனங்கள் சாலைகளில் நீண்ட வரிசையில் நின்ால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேச்சிப்பாறையில் ஆபத்தான பயணம்: பேச்சிப்பாறை அணையின் நடைமேடை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில், சுற்றுலாப் பயணிகள் அணையில் படகுப் பயணம் நடைபெறும் பகுதிகளுக்குச் சென்றனா். இங்கு பழங்குடி மக்களுக்காக மட்டுமே படகுகள் இயக்கப்படும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் அந்தப் படகுகளில் அணையில் சவாரி செய்தனா். படகு ஓட்டிகள் உரிய அனுமதி இல்லாமல் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை அணையின் உள்ளே அழைத்துச் செல்வது ஆபத்துகளை ஏற்படுத்தும் என உள்ளூா் மக்கள் சிலா் கவலை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.