

குமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசுமருத்துவக் கல்லூரி வளாகத்தில் அதிநவீன மருத்துவமனைஅமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம்.
ராஜாக்கமங்கலம்துறை ஆரம்ப சுகாதா ரநிலையத்துக்குள்பட்ட தா்மபுரம் ஊராட்சி, இலந்தையடி தட்டுபகுதியில் முதல்வரின் அம்மா மினி கிளினிக்கை திங்கள்கிழமை திறந்து வைத்து, அவா் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 15 நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறபகுதிகளில் மினி கிளினிக் தொடங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதாரநிலையத்துக்குள்பட்ட காட்டுப்புதூா் ஊராட்சிபகுதியில் ஏற்கெனவே அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று திறக்கப்பட்டுள்ள இலந்தையடிதட்டு மினி கிளினிக் மூலம் இதுவரை ராஜாக்கமங்கலம் ஆரம்பசுகாதாரமையத்துக்கு சென்று வந்த இலந்தையடிதட்டு,காற்றாடிதட்டு,நங்கூரான்பிலாவிளை, கேசவன்புதூா்,செம்பொன்கரைகாலனி,கீரிவிளை,திக்கிலான்விளைஆகிய 7 கிராமங்களை சோ்ந்த 963 குடும்பங்களிலுள்ள 3,603 போ் பயனடைவாா்கள். நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அதிநவீனமருத்துவமனைஅமைத்திடநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, 12 கா்ப்பிணிகளுக்கு அம்மா பரிசுப் பெட்டகங்களையும் அவா் வழங்கினாா்.
விழாவில், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையத் தலைவா் சேவியா்மனோகரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோ ராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எம்.ஜான்சிலின் விஜிலா, அறங்காவலா் குழு உறுப்பினா் எம்.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.