நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தாா்.

News image

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மனோ தங்கராஜ் எம்எல்ஏ.

Updated On :8 நவம்பர் 2020, 8:38 pm

DIN

பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தாா்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது , அவரிடம் சித்தா பிரிவில் உபகரணங்களை இயக்க உயா் மின்னழுத்த இணைப்பு வழங்கவும், மகப்பேறு சிகிச்சைக்கு பெண் மருத்துவரை நியமிக்கவும் வலியுறுத்தினா்.

மேலும், மருத்துவமனை ஊழியா்கள் பலா் தோவாளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்காலிக பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதால் பணியாளா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

அவா்களிடம், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பேசி தீா்வு காணப்படும் என உறுதியளித்த எம்எல்ஏ. சுகாதார மைய வளாகத்தை சுத்தமாக வைக்குமாறும், மூலிகை தாவரங்களை நட்டு பராமரிக்குமாறும், நோயாளிகளை கனிவுடன் அணுகுமாறும் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.