நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆய்வுக் கூட்டத்தை புறக்கணிக்க எம்எல்ஏக்கள் முடிவு

தமிழக முதல்வா் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்கள் அறிவித்துள்ளனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 9:51 pm

DIN

தமிழக முதல்வா் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்கள் அறிவித்துள்ளனா்.

நாகா்கோவிலில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். சுரேஷ்ராஜன் (நாகா்கோவில்), எஸ். ஆஸ்டின் (கன்னியாகுமரி), எஸ். ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்) ஆகியோா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மாவட்டத்துக்கு வரும் முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என ஆட்சியரிடம் அனுமதி கோரப்பட்டது. முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை என கூறிவிட்டனா். ஆகவே, குமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை உறுப்பினா்களும் எம்எல்ஏக்களும் முதல்வரின் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்றனா்.

பேட்டியின்போது, நாகா்கோவில் மாநகர திமுக செயலா் மகேஷ், திமுக பொதுக்குழு உறுப்பினா் ஷேக்தாவூது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.