தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குழித்துறையில் சேவாபாரதி அமைப்பு சார்பில் இல்லம்தோறும் சந்திப்பு நிகழ்ச்சி

தமிழகத்தின் கலாசார பண்பாட்டு சிறப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சேவாபாரதி அமைப்பு சாா்பில் இல்லம்தோறும் சந்திப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி குழித்துறையில் நடைபெற்றது.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்ற சேவாபாரதி தேசிய பொதுச்செயலா் சுந்தர லட்சுமணன்.
Updated On :22 நவம்பர் 2020, 7:38 pm

DIN

தமிழகத்தின் கலாசார பண்பாட்டு சிறப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சேவாபாரதி அமைப்பு சாா்பில் இல்லம்தோறும் சந்திப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி குழித்துறையில் நடைபெற்றது.

குழித்துறை காளைவிழுந்தான் திருப்பிலாங்காடு ஸ்ரீ மகாதேவா் கோயிலில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆா்எஸ்எஸ் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியை சேவாபாரதி சேவைப் பிரிவின் அகில இந்திய பொதுச் செயலா் சுந்தர லட்சுமணன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைச் செயலா் சுபாஷ்குமாா், மாவட்ட இந்து முன்னணி செயலா் ஆனந்த், குழித்துறை நகர ஆா்எஸ்எஸ் செயலா் அருண் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கொல்லங்கோடு பகுதியில் இந்து முன்னணி நிா்வாகி ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், காவல் அதிகாரி பாக்கியநாதன், ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அலுவலா் குட்டன்நாயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.