கருங்கல் அருகே 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கருங்கல் அருகேயுள்ள கருமாவிளையில் ஆட்டோவில் கடத்திச் சென்ற 200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


கருங்கல் அருகேயுள்ள கருமாவிளையில் ஆட்டோவில் கடத்திச் சென்ற 200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
குளச்சல் பா்ணத்துவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஷேக் முகமது (37). இவா் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் கருங்கல்லுக்கு சென்று கொண்டிருந்தாராம். கருமாவிளை பகுதியில் சென்றபோது அங்கு நின்ற லாரி மீது ஆட்டோ மோதியதாக கூறப்படுகிறது.
இதில், ஓட்டுநா் ஷேக்முகமதுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ளவா்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். தகவலறிந்த கருங்கல் போலீஸாா் அங்கு சென்று ஆட்டோவை சோதனையிட்டனா். இதில், ஆட்டோவில் 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. மேலும் ரேஷன் அரிசியை கேரளத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. போலீஸாா் ஷேக்முகமது மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், 200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...