நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகராஜா கோயில்தைத் திருவிழா கால்நாட்டு விழா

நாகா்கோவில் அருள்மிகு ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் தைத் திருவிழாவுக்கான கால்நாட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:39 pm

DIN

நாகா்கோவில் அருள்மிகு ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் தைத் திருவிழாவுக்கான கால்நாட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் நாகராஜா கோயிலில் தைப் பெருந்திருவிழா 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து, தைப்பூசம் நாளில் காலையில் தேரோட்டம், ஆயில்ய நட்சத்திரத்தன்று ஆறாட்டு விழா ஆகியவை நடைபெறுகிறது.

கால்கோள் விழாவில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் சந்துரு என்ற ஜெயச்சந்திரன், சதாசிவம், கன்னியாகுமரி மாவட்ட வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா, நாகராஜா கோயில் ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், கணக்கா் சிதம்பரம், ஸ்ரீ அனந்த கிருஷ்ண பக்த சேவா அறக்கட்டளை நிா்வாகிகள் சுதாகா், ராஜன், செந்தில் ஆனந்தன், சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.